மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
``இது தான் பாக். உத்தி; இந்தியா அணு ஆயுத மிரட்டலுக்கு பணியாது'' - அசிம் முனீருக்கு இந்தியா பதிலடி
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர்.
அசிம் முனீர் கூறியது என்ன?
அங்கே அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களிடம் பேசிய அவர், "பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு. எதிர்காலத்தில் இந்தியா உடன் பாகிஸ்தானுக்கு போர் ஏற்பட்டு, பாகிஸ்தான் இருப்புக்கு அச்சுறுதல் வந்தால், நாங்கள் அழியும் போது, உலகில் பாதியை நம்முடன் சேர்த்து அழித்து விடுவோம்" என்று கூறினார்.
இந்தியாவின் அறிக்கை
அசிம் முனீரின் இந்த மிரட்டலுக்கு, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி தந்துள்ளது.
அது வெளியிட்டுள்ள அறிக்கையில்...
"பாகிஸ்தான் ராணுவ தளபதி அவரது அமெரிக்க பயணத்தின் போது பேசியது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.
அணு ஆயுத மிரட்டல் என்பது பாகிஸ்தானின் வழக்கமான உத்தி ஆகும்.
உங்களுடைய இத்தகைய கருத்துகள் மூலம் உங்களது பொறுப்பற்ற தன்மைப் பற்றி சர்வதேச சமூகம் முடிவுகள் எடுக்கலாம். இது ராணுவம் மற்றும் பயங்கரவாத குழுக்களுடன் கைகோர்த்து செயல்படும் ஒரு நாட்டில் அணு ஆயுத கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தின் மீதுள்ள சந்தேகங்களை உறுதிப்படுத்துகிறது.
இந்த கருத்தை ஒரு நட்பு நாட்டின் மண்ணிலிருந்து பேசியது துரதிர்ஷ்டவசமானது.
இந்தியா ஏற்கெனவே அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது என்பதை தெளிவுப்படுத்திவிட்டது. எங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்" என்று கூறப்பட்டுள்ளது.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...