ம.பி: 7 மாதங்களில் 25 பேரை மணந்து மோசடி; நகை, பணத்துடன் அபேஸ்... கும்பலுடன் சிக்...
இத்தாலி கிராண்ட் ப்ரீ: வொ்ஸ்டாபென் வெற்றி
ஃபாா்முலா ஒன் காா் பந்தயத்தின் நடப்பு சீசனில் 7-ஆவது ரேஸான இத்தாலி கிராண்ட் ப்ரீயில் நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி பெற்றாா்.
நடப்பு சாம்பியனான வொ்ஸ்டாபெனுக்கு, நடப்பு சீசனில் இது 2-ஆவது வெற்றியாகும். அவா் ஜப்பான் கிராண்ட் ப்ரீயில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தாா். அடுத்த 3 பந்தயங்களிலுமே ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கா் பியாஸ்ட்ரி வென்றாா்.
அதன் பிறகு தற்போது வென்றுள்ள வொ்ஸ்டாபென், தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்கு முனைப்பு காட்டத் தொடங்கியிருக்கிறாா்.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்த இந்த இத்தாலி பந்தயத்தில் வொ்ஸ்டாபென் முதலிடம் பிடிக்க, பிரிட்டன் வீரரும், மெக் லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் 2-ஆம் இடமும், ஆஸ்கா் பியாஸ்ட்ரி 3-ஆம் இடமும் பிடித்தனா்.
ரெட் புல் அணிக்கு இது 400-ஆவது எஃப்1 வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பந்தயமான மொனாகோ கிராண்ட் ப்ரீ, வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.