செய்திகள் :

’இந்தியர்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்’ - டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

post image

இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததால் இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 25 % வரியை அதிபர் டிரம்ப் விதித்தார்.

இதனிடையே, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் தொடர்ந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் மேற்கொண்டதால் கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டது.

இதனால், இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ வெளியிட்டு வருகிறார்.

தற்போது இந்தியாவை ரஷியாவுக்கான சலவைக்கூடம் என்றும் இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டி வருவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் பேசியதாவது:

“மோடி ஒரு சிறந்த தலைவர். உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இருக்கும் நிலையில், புதினுடன் எப்படி ஒத்துழைக்கிறார் எனத் தெரியவில்லை.

இந்திய மக்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன், தயவுசெய்து என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். இதனை நாம் நிறுத்த வேண்டும்.

உக்ரைன் போருக்கு முன்பு, ரஷியாவிடம் இருந்து இந்தியா பெருமளவிலான கச்சா எண்ணெய்யை வாங்கவில்லை. தற்போது ரஷிய நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் கொடுப்பதால், இந்தியா அதனை வாங்கி சுத்தகரித்து, பின்னர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவுக்கு அதிக விலைக்கு விற்கிறது. ரஷியாவின் போருக்கு எண்ணெய் ஊற்றுகிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே, ”ரஷியா - உக்ரைன் போர் ’மோடியின் போர்’. ரஷியாவின் கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவது, மாஸ்கோவின் ராணுவ ஆக்கிரமிப்பைத் தூண்டுகிறது. அமைதிக்கான பாதை தில்லி வழியாகதான் செல்கிறது.” எனப் பீட்டர் நவரோ பேசியிருந்தது சர்ச்சையானது.

US President Donald Trump's advisor Peter Navarro has accused Brahmins of profiting at the expense of the Indian people.

இதையும் படிக்க : மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

சென்னை ஐஐடி மீண்டும் தேசிய தரவரிசையில் முதலிடம்: ஏழாவது ஆண்டாக ஆதிக்கம்!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(என்ஐஆர்எஃப்) 2025 கல்வி அமைச்சகத்தால் ஆண்ட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி: செப்டம்பரில் மின்னணு பொருள்கள், கார் விற்பனை மந்தமாகவே இருக்கும்!

ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பு வருகிற செப். 22 முதல்தான் அமலுக்கு வருவதால் அதுவரை மின்னணு பொருள்கள் மற்றும் வாகனங்களின் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதார... மேலும் பார்க்க

பறவை மோதல்: பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து!

விஜயவாடாவிலிருந்து பெங்களூக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறவை மோதியதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்றுகொண்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!

பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னணி வேட்பாளராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாஜகவின் தற்போ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய ... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ம... மேலும் பார்க்க