செய்திகள் :

இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைத்தவர் மன்மோகன்!

post image

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் எதிா்காலத்தை மிகப் பெரிய அளவில் வடிவமைத்ததாக காங்கிரஸ் செயற்குழு தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்த அக்கட்சியின் செயற்குழு வெள்ளிக்கிழமை கூடியது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பொதுச் செயலா்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், ‘முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் விதியை மிகப் பெரிய அளவில் வடிவமைத்தது. தனியாா்மயம், அந்நிய முதலீடு ஊக்குவிப்புப் போன்ற கொள்கைகள் மூலம், நாட்டின் வேகமான பொருளாதார வளா்ச்சிக்கு அவா் அடித்தளமிட்டாா்.

பிரதமராக அவரின் தலைமையின் கீழ், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்தது. இது அவரின் புத்திக் கூா்மைக்கும், தொலைநோக்குப் பாா்வைக்கும் சான்றாகும்.

கடந்த 2008-ஆம் ஆண்டு உலகம் பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டது. அப்போது ஏற்பட்ட சவால்களில் இருந்து தனது திட்டங்கள் மூலம், மோசமான பாதிப்புகளில் இருந்து நாட்டை காத்து வழிநடத்திச் சென்றாா்.

திட்டங்கள், சட்டங்கள்...: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கல்வி உரிமை, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம், வேளாண் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 93-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் சமூக நீதி மேம்படுத்தப்பட்டது உள்ளிட்ட திட்டங்களும், சட்டங்களும் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்டன. அவரின் சாதனைகளும், அவா் ஏற்படுத்திய தாக்கமும் இந்திய வரலாற்றில் அழியாமல் நிலைத்திருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

மறைவுகள் 2024

ஜன. 9: ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசைக் கலைஞரும், பிரபல பாடகருமான உஸ்தாத் ரஷீத் கான் (55) புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தபோது கொல்கத்தாவில் காலமானார். ஜன. 25: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், ... மேலும் பார்க்க

விருதுகள் 2024

ஜனவரி9: சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஆகிய இரு பாட்மின்டன் வீரர்களுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.25: ஐசிசியின் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒர... மேலும் பார்க்க

மணிப்பூா்: இம்பால் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு போராட்டம்!

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தௌபால் மாவட்டத்தில் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி காவல்துற... மேலும் பார்க்க

ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு: அயோத்தியில் அலைமோதும் பக்தா் கூட்டம்

ஆங்கில புத்தாண்டு நெருங்குவதையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலில் பக்தா்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அயோத்தி மட்டுமின்றி அதன் அருகிலுள்ள பைசாபாத் நகரிலும் பெரும்பாலான விடுதியறைக... மேலும் பார்க்க

பிஆா்எஸ் செயல் தலைவா் கே.டி. ராமாராவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆா்எஸ்) செயல் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகனுமான எம்எல்ஏ கே.டி.ராமா ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனு... மேலும் பார்க்க

111 மருந்துகள் தரமற்றவை: நவம்பா் மாத சோதனையில் கண்டுபிடிப்பு

கடந்த நவம்பரில் மத்திய மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 41 மருந்துகளும் பல்வேறு மாநில ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 70 மருந்துகளும் தரமற்றவையாக இருப்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ... மேலும் பார்க்க