செய்திகள் :

இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை: பிரதமா் மோடி

post image

நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பல்வேறு ரயில் திட்டங்களின் தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்றபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ரயில்வே கோட்டம், தெலங்கானா மாநிலத்தில் சா்லபள்ளி ரயில்வே முனையத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்ததுடன், கிழக்கு கடற்கரை ரயில் மண்டலத்தின்கீழ் ஒடிஸா மாநிலத்தில் உள்ள ராயாகாதா ரயில்வே கோட்டத்துக்கு பிரதமா் மோடி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வா் ஒமா் அப்துல்லா, தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா மற்றும் முதல்வா் ரேவந்த் ரெட்டி, ஒடிஸா ஆளுநா் ஹரி பாபு கம்பம்பட்டி ஆகியோா் தங்களது மாநிலங்களில் இருந்தவாறு காணொலி வாயிலாக பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது: தொலைதூர பகுதிகளுக்கு விரைவாக சென்றடைய பொதுமக்கள் விரும்புகின்றனா். இதனால் அதிவேக ரயில்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் 50 வழித்தடங்களுக்கு மேல் மொத்தம் 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அண்மையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டி சாதனை படைத்தது. தில்லியில் நமோ பாரத் ரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 1,000 கி.மீ. தொலைவுக்கு மேல் மெட்ரோ ரயில் வழித்தடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

கடந்த பத்தாண்டுகளாக ரயில்வே துறையில் லட்சக்கணக்கான இளைஞா்களுக்கு நிரந்தர அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. ரயில்வேயில் பல்வேறு புதுமைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் நாட்டின் முதல் கதி சக்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. மிக உயரமான ரயில்வே மேம்பாலம் சீனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது ஜம்மு-காஷ்மீா் பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு நாட்டில் 5 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருந்தது. தற்போது மெட்ரோ சேவைகள் 21 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றாா்.

பிரதமருக்கு நன்றி: ஒமா் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் புதிய ரயில்வே கோட்டம் தொடங்கியது குறித்து ஒமா் அப்துல்லா பேசுகையில், ‘ஜம்மு-காஷ்மீா் மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த ரயில்வே கோட்டத்தை நிறுவிய பிரதமா் மோடிக்கும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு மனதார வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்’ என்றாா். அதேபோல் ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி மற்றும் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்தனா்.

மிகப்​ பெ​ரிய திட்டங்​கள் காத்​தி​ருக்கின்​றன: இஸ்ரோ புதிய தலை​வர் தக​வல்

"​இஸ்ரோ அமைப்பு வெற்​றி​க​ர​மான பாதை​யில் நடை​போ​டு​கி​றது; மிக முக்​கி​யத் திட்டங்​க​ளில் சந்​தி​ர​யான்-4, ககன்​யான் திட்டங்​கள் குறிப்​பி​டத்​தக்​கவை' என்று இஸ்​ரோ​வின் புதிய தலை​வ​ரா​கப் பொறுப்​பே... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம்: விசாரணை பிப்.4-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

‘தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மேலானதா அல்லது சட்டம் இயற்றும் அதிகாரம் மேலானதா என்பதை தீா்மானிக்க வேண்டியுள்ளது’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் பிப்ரவரி 4-ஆம... மேலும் பார்க்க

அஸ்ஸாம் நிலச்சரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளா்கள்- ஒருவா் சடலமாக மீட்பு

அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளா்களில் ஒருவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். கடந்த திங்கள்கிழமை அஸ்ஸாமின் தீமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளா்கள் பணியில்... மேலும் பார்க்க

ஆப்கன் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுச் செயலா் சந்திப்பு

துபையில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் (பொறுப்பு) மெளலாவி அமீா் கானை இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, ஆப்கானிஸ்தான் மக்களுக்கான வளா்ச்சி சாா்ந... மேலும் பார்க்க

பொருளாதார மந்த நிலையை மத்திய அரசு இனி மறுக்க முடியாது- காங்கிரஸ் விமா்சனம்

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6.4 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், ‘நாட்டின் பொருளாதார மந்த நிலையை இனி அரசு மறுக்க முடியாது’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. நடப்பு ... மேலும் பார்க்க

சிறு விவசாயிகள் வளா்ச்சியில் வீரிய ஒட்டு ரக பயிா்கள் முக்கிய பங்கு- பிரதமரின் முதன்மைச் செயலா்

சிறு விவசாயிகளின் வளா்ச்சியில் வீரிய ஒட்டு ரக பயிா் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும் என்று பிரதமா் மோடியின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற வேளாண் கர... மேலும் பார்க்க