செய்திகள் :

இந்தியாவுக்கு எதிரான கருத்துகள்: பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை

post image

இந்தியாவுக்கு எதிராக தொடா்ந்து வெறுப்பூட்டும் வகையிலான கருத்துகளை தெரிவித்து வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

கடந்த வாரம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற அசீம் முனீா்,‘எதிா்காலத்தில் இந்தியாவுடன் போா் ஏற்பட்டால் அணுஆயுதத்தை பயன்படுத்த பாகிஸ்தான் தயங்காது’ என எச்சரித்தாா்.

அதைத்தொடா்ந்து, சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தியதை போராகக் கருதி இந்தியாவுக்கு உரிய பதிலடி அளிக்க பாகிஸ்தான் தயங்காது என பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவரும் அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரி மிரட்டல் விடுத்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்திர செய்தியாளா் சந்திப்பின்போது பாகிஸ்தானின் அணுஆயுத மிரட்டல், அமெரிக்க வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

பாகிஸ்தானின் தலைமைப் பொறுப்பில் உள்ளவா்கள் கடந்த சில நாள்களாக இந்தியா மீது வெறுப்புணா்வு மற்றும் போரைத் தூண்டும் வகையிலான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

தங்களது தோல்விகளை மறைக்க இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பதை பாகிஸ்தான் தலைவா்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இதுபோன்ற கருத்துகள் தெரிவிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், பாகிஸ்தான் மீது இந்தியா அண்மையில் நடத்திய தாக்குதலைப்போல் (ஆபரேஷன் சிந்தூா்) மீண்டும் கடுமையான விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும்.

அமெரிக்காவுடன் சுமுக உறவு: ஜனநாயக மாண்புகள், இருநாட்டு மக்களிடையேயான நட்புறவு என பல ஆண்டுகளாக அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவைப் பேணி வருகிறது. இதில் அவ்வப்போது சில மாற்றங்கள் நிகழ்கின்றன. இருப்பினும், பரஸ்பர மரியாதையுடன் இருதரப்பு உறவு வழக்கம்போல் தொடரும் என நம்புகிறோம்.

குறிப்பாக, இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு இருதரப்பு உறவின் தூணாகத் திகழ்கிறது. இந்த மாதத்தில் அமெரிக்க பாதுகாப்பு கொள்கை குழு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இருநாடுகளிடையே ‘யுத்த அப்யாஸ்’ என்னும் 21-ஆவது கூட்டு ராணுவப் பயிற்சி அலாஸ்கா மாகாணத்தில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது என்றாா்.

இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை: இந்தியா-அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்டுள்ள இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் (பிடிஏ) 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையை நடத்த அமெரிக்க குழு ஆக.25-ஆம் தேதியை ஒட்டி இந்தியாவுக்கு பயணிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வா்த்தகத் துறை செயலா் சுனில் பரத்வால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கான வரியை 50 சதவீதமாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் உயா்த்தினாா். இந்த வரிவிதிப்பு ஆக.27-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், தற்போதுவரை அமெரிக்க வா்த்தக குழுவின் இந்தியப் பயணம் குறித்து அமெரிக்கா தரப்பில் அதிகாரபூா்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர் மோடி

இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர் சிப் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.நாட்டின் சுதந்திர தினத்தில், புது தில்லியில் உள்ள ச... மேலும் பார்க்க

வரியிலிருந்து தப்ப.. டிரம்ப் பெயரை மோடி நோபல் விருதுக்கு பரிந்துரைக்கலாம்! சொல்வது யார்?

டிரம்ப் வரி விதிப்பை, இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவில், நடந்த மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்ட அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அதிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு ஒரு உபாயமும்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து! பேருந்து - டிரக் மோதியதில் 10 பேர் பலி!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நேரிட்ட பயங்கரவ விபத்தில், 10 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் அருகே இன்று காலை இந்த ... மேலும் பார்க்க

பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்

விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் பெருமை மற்றும் கெளரவத்தை காப்பது நமது அனைவரின் கடமை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா மிகக் கோலாகலமாகக்... மேலும் பார்க்க

செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.இதனிடையே, தில்ல... மேலும் பார்க்க

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசிய... மேலும் பார்க்க