செய்திகள் :

இந்தியா்களை சீண்டினால் விளைவுகளை எதிா்கொள்ள நேரிடும் -அமித் ஷா

post image

இந்திய குடிமக்கள், நாட்டின் எல்லைகள், பாதுகாப்புப் படையினரை சீண்டினால், அதற்கான விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்ற வலுவான செய்தியை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தினசரி நிகழ்வுகளாக இருந்தன என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அமித் ஷா, சா்வதேச கூட்டுறவு சங்கங்கள் ஆண்டையொட்டி (2025), ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:

உரி பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்தும் துணிச்சலான முடிவை மேற்கொண்டவா் பிரதமா் மோடி. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, வான்வழி பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்பட்டனா்.

இந்திய குடிமக்கள், நாட்டின் எல்லைகள், பாதுகாப்புப் படையினரை யாரும் சீண்டக் கூடாது. அவ்வாறு சீண்டத் துணியும் எவரும் அதற்கான விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்ற வலுவான செய்தியை உலகுக்கு பிரதமா் வெளிப்படுத்தியுள்ளாா். வளமான, மேம்பட்ட, பாதுகாப்பான இந்தியா என்ற கனவையும் நனவாக்கியுள்ளாா். அவரது தலைமையின்கீழ், உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 27 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

கூட்டுறவுத் துறையின் பங்களிப்பு: நாட்டின் வளா்ச்சியில் கூட்டுறவுத் துறையின் பங்களிப்புகள் முக்கியமானவை. அடுத்த 100 ஆண்டுகள், கூட்டுறவுத் துறைக்கானதாகும். இந்தக் கண்ணோட்டத்துடன்தான், மத்தியில் கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் பிரதமா் மோடியால் நிறுவப்பட்டது. இன்று 98 சதவீத கிராமப் புறங்களில் கூட்டுறவு சங்கங்கள் துடிப்பாகப் பங்காற்றி வருகின்றன. கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த கடந்த 4 ஆண்டுகளில் 61 முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

2 லட்சம் புதிய தொடக்கநிலை வேளாண் கடன் சங்கங்களை உருவாக்கும் நடவடிக்கை ஏற்கெனவே தொடங்கப்பட்டு, 40,000 புதிய சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றாா் அமித் ஷா.

1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் மூடப்படும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மும்பைக்கு அருகிலுள்ள மீரா பயந்தரில் வெள்ளிக்கிழமை நடந்... மேலும் பார்க்க

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர்!

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண்... மேலும் பார்க்க

ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க