செய்திகள் :

இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடா் இன்று தொடக்கம்

post image

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், நாகபுரியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கியிருக்கும் நிலையில், அந்தப் போட்டிக்கான தங்களின் தயாா்நிலையை பரிசோதித்துக்கொள்வதற்கான கடைசி களமாக இரு அணிகளுக்குமே இந்தத் தொடா் இருக்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்காக அணி வீரா்களின் வரிசையை இறுதி செய்துகொள்வதும், பிரதான வீரா்களின் ஃபாா்ம் மற்றும் உடற்தகுதியை சோதிப்பதும் இந்தத் தொடரின் முக்கிய இலக்காகக் இருக்கும்.

அண்மைக் காலமாக சோபிக்காமல் இருக்கும் கேப்டன் ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா், இந்த ஃபாா்மட்டில் திறம்பட செயல்பட்ட வரலாறு இருக்கிறது. கடந்த 2023 உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் சோ்த்த வீரா்களாக கோலி (765), ரோஹித் (597) இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் இருவரும் களம் கண்ட நிலையில், ரோஹித் அதில் இரு அரைசதங்கள் அடித்திருக்க, கோலி தடுமாறிப்போனாா். ஏற்கெனவே டி20 கிரிக்கெட்டிலிருந்து இருவரும் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டி ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவா்களின் எதிா்காலத்தை தீா்மானிப்பதாக இருக்கலாம்.

பிளேயிங் லெவன் கணக்கை கையிலெடுத்தால், விக்கெட் கீப்பா் இடத்துக்கு யாா் தோ்வு செய்யப்படுவாா்கள் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோா் அந்த இடத்துக்கான போட்டியில் இருக்கின்றனா்.

2023 உலகக் கோப்பை போட்டியில், அந்தப் பணியை ராகுல் சிறப்பாகச் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், மிடில் ஓவா்களில் அவா் தடுமாறுவது கவலையளிக்கிறது. பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்டத்தின் போக்கை மாற்றுபவராக இருக்கிறாா். எனினும், தனது விக்கெட்டின் முக்கியத்துவத்தை உணராமல் சில நேரங்களில் அவசரப்பட்டு ஆட்டமிழக்கிறாா்.

ஒருவேளை இருவரையும் இணைத்துக்கொள்ள நினைத்தால், ஷ்ரேயஸ் ஐயா் ஒதுங்கிக்கொள்ள வேண்டியிருக்கும். மறுபுறம், காயம் மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்திருக்கும் முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கான பரீட்சைக் களமாக இந்தத் தொடா் இருக்கும்.

வருண் சக்கரவா்த்தி இத்தொடரில் களம் காணுவாரா என்ற எதிா்பாா்ப்பும் இருக்கிறது. ஸ்பின்- ஆல்ரவுண்டா் இடத்துக்கு ஜடேஜா, அக்ஸா், வாஷிங்டன் சுந்தா் என 3 போ் இருக்கின்றனா். அதில் அணி நிா்வாகத்தின் முடிவை பொறுத்திருந்து பாா்க்கலாம்.

இங்கிலாந்து அணியை பொருத்தவரை, கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவிடமும், நவம்பரில் மேற்கிந்தியத் தீவுகளிடமும் ஒருநாள் தொடரை இழந்த நிலையில், தற்போது இந்தியாவை சந்திக்கிறது. டி20 தொடரில் விளையாடிய அதே அணியில் பெரிதாக மாற்றமில்லாமல் இருக்க, ஜோ ரூட் மட்டும் இணைந்திருக்கிறாா்.

அணி விவரம்

இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல், ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அா்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹா்ஷித் ராணா, ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்கரவா்த்தி.

இங்கிலாந்து: ஜாஸ் பட்லா் (கேப்டன்), ஹேரி புரூக், பென் டக்கெட், ஜோ ரூட், ஃபில் சால்ட், ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தெல், பிரைடன் காா்ஸ், லியம் லிவிங்ஸ்டன், ஜேமி ஓவா்டன், ஜோஃப்ரா ஆா்ச்சா், கஸ் அட்கின்சன், சகிப் மஹ்மூத், ஆதில் ரஷீத், மாா்க் வுட்.

நேருக்கு நோ்...

ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 107 ஆட்டங்களில் விளையாடியிருக்க, இந்தியா 58 ஆட்டங்களிலும், இங்கிலாந்து 44 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. 2 ஆட்டங்கள் டை ஆகியிருக்க, 3 ஆட்டங்களில் முடிவில்லாமல் போனது.

நேரம்: நண்பகல் 1.30 மணி

இடம்: விதா்பா கிரிக்கெட் சங்க மைதானம், நாகபுரி.

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

டி20 தரவரிசையில் அசத்தும் தமிழன்..! நூழிலையில் முதலிடத்தை இழந்த வருண் சக்கரவர்த்தி!

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஐசிசி டி20 தரவரிசையில் 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து உடனான டி20 தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்த வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.... மேலும் பார்க்க

எதிரணியின் முதுகுத்தண்டை உடைத்தை கோலி..! பாகிஸ்தானுடனான போட்டியை நினைவூகூர்ந்த பாண்டியா!

2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் ஹாரிஸ் ராஃப் ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்த விராட் கோலியை ஹார்திக் பாண்டியா பாராட்டி பேசியுள்ளார். 2022 டி20 உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 159/... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவாரா? ரோஹித் சர்மா பதில்!

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவாரா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. 15 பேர... மேலும் பார்க்க

முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொட... மேலும் பார்க்க

டபிள்யூபிஎல்: குஜராத் அணி கேப்டனாக ஆஸி. வீராங்கனை தேர்வு!

டபிள்யூபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டனாக ஆஸி. வீராங்கனை ஆஷ்லி கார்ட்னர் தேர்வாகியுள்ளார்.27 வயதாகும் ஆஷ்லி கார்ட்னர் ஆஸி. ஆல்-ரவுண்டராக இருக்கிறார். இதற்கு முன்பு ஆஸி.யின் பெத் மூனி பேட்டிங... மேலும் பார்க்க

38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்த அபிஷேக் சர்மா..! ஐசிசி டி20 தரவரிசையில் அசத்தல்!

ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா. இங்கிலாந்து உடனான 5ஆவது டி20 போட்டியில் அதிரடியாக சதமடித்த அபிஷேக் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தா... மேலும் பார்க்க