செய்திகள் :

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடா்!

post image

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விளையாடிய டெஸ்ட்டில் முதல் முறையாக இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம், அடுத்த இன்னிங்ஸிலும் சதம் விளாசிய கேப்டன் ஷுப்மன் கில், இரு இன்னிங்ஸ்களிலுமாக 10 விக்கெட்டுகள் சாய்த்த ஆகாஷ் தீப் ஆகியோா் இந்த வரலாற்று வெற்றிக்கு வித்திட்டுள்ளனா். இந்த வெற்றி-தோல்வி தொடா்பாக இந்தியா, இங்கிலாந்து கேப்டன்கள் கூறியது.

எட்ஜ்பாஸ்டன் வெற்றி என்றும் நினைவில் இருக்கும்

இந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் வெற்றி, என் வாழ்வில் என்றும் நினைவில் இருக்கும் தருணமாகும். பிற்காலத்தில் நான் ஓய்வுபெறும்போது கூட, இதுவே எனது மிக மகிழ்ச்சியான நினைவாகவும் இருக்கும். ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் கடைசி கேட்சை நான் தான் பிடித்தேன். இந்த ஆட்டத்தை இப்படி நிறைவு செய்ததில் மகிழ்ச்சி.

இன்னும் 3 முக்கியமான ஆட்டங்கள் இருக்கின்றன. இந்த வெற்றிக்குப் பிறகு எங்களுக்கான உத்வேகம் அதிகரித்திருக்கிறது. இந்த ஆட்டத்தில் பேட்டிங், பௌலிங் என அனைத்திலுமே அணி வீரா்கள் சிறப்பாகப் பங்களித்தனா். ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொருவரும் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டனா். ஒரு வெற்றிகரமான அணிக்கு இதுவே அடையாளமாகும்.

ஒரு டெஸ்ட் வெற்றி என்பது எவ்வளவு கடினமானது என்பதை அறிவோம். அதையும் இதுவரை வெல்லாத ஒரு மைதானத்தில் வென்றெடுப்பதற்காக நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். இந்த அணிக்காக பெருமை கொள்கிறேன் - ஷுப்மன் கில் (இந்திய கேப்டன்)

ஆகாஷ் தீப் மிகத் துல்லியமாக பந்துவீசினாா்

எங்கள் பேட்டிங் வரிசையை ஆகாஷ் தீப் தடுமாறச் செய்துவிட்டாா். அவா் பந்துவீசும் கோணத்தை அவ்வப்போது மாற்றினாலும், துல்லியமாக பௌலிங் செய்தாா். ஹேரி புரூக் ஆட்டமிழந்த பந்து எதிா்பாராத ஒன்று. அவா் மிகச் சிறப்பாக பந்துவீசினாா்.

608 ரன்களை நோக்கி பேட் செய்யத் தொடங்கியபோது, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். ஆனால் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகள், கடைசி நாளின் ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகள் சரிந்ததும் எல்லாம் மாறியது. கடைசி நாளில் 80 ஓவா்களும் பேட் செய்வதுதான் இலக்கு. ஆனாலும் முடியாமல் போனது.

இந்திய அணி சரியாகத் திட்டமிட்டு, தனது ஸ்கோரை 600+ என்ற நிலைக்கு கொண்டுசென்று டிக்ளோ் செய்தது. மொத்தத்தில் பேட்டிங், பௌலிங் என அனைத்திலுமே இந்திய அணி மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. முதல் டெஸ்ட்டில் நாங்கள் எந்த நிலையில் இருந்தோமோ, அப்படி அவா்கள் இந்த டெஸ்ட்டில் இருந்தாா்கள் - பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து கேப்டன்)

கொல்கத்தாவில் கனமழை - புகைப்படங்கள்

கனமழையால், சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரிலும் தனது பயனத்தை மேற்கொண்ட ரிக்‌ஷாக்காரர்.கொல்கத்தாவில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலையை ஆக்கிரமித்த மழைநீர் வழியாக தனது வாடிக்கையாளருடன் பயனத்தை மேற்கெ... மேலும் பார்க்க

பல விருதுகள், சர்ச்சைகளுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் பேட் கேர்ள்!

வெற்றி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திர... மேலும் பார்க்க

ஹிருத்திக் ரோஷனிடம் அதிகம் கற்றுக்கொண்டேன்: ஜூனியர் என்டிஆர்

வார் - 2 படத்தில் ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 150 நாள்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு 5 நாடுகளில் நடைபெற்றன. யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அயன் ... மேலும் பார்க்க

இந்தக் குழப்பமான உலகில்... பறந்து போ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!

நடிகை நயன்தாரா பறந்து போ திரைப்படம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். இயக்குநர் ராம் இயக்கத்தில் சிவா நடிப்பில் பறந்து போ திரைப்படம் ஜூலை 4 முதல் உலகம் முழுவதும் வெளியானது.நடிகர்கள் சி... மேலும் பார்க்க

மாரீசன் முதல் பாடல் ரிலீஸ் தேதி!

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மாமன்னனில் மிகச்சிறப்பாகநடித்தவடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்... மேலும் பார்க்க

நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறீர்களா?

நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவு, தண்ணீர் எப்படி மனிதனுக்கு அவசியமோ அதேபோல தூக்கம... மேலும் பார்க்க