தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!
'இந்தியா நினைத்தால் நாளைக்கே 25% வரியில் இருந்து தப்பிக்க முடியும்' - ட்ரம்பின் ஆலோசகர் பேச்சு
இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவிகித வரி அமலுக்கு வந்துவிட்டது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அமெரிக்க தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது...
"இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அதன் மீதான கூடுதல் 25 சதவிகித வரி எளிதாக நாளைக்கே நீங்கிவிடும்.

ஆனால், இந்தியா அதை செய்யாமல் அடம்பிடிக்கிறது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவின் இறையாண்மை உரிமை என்று பேசிக்கொண்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அது மாதிரி இந்தியா நடந்துகொள்ள வேண்டும். ஆனால், இந்தியாவோ சர்வாதிகாரியைப் போல நடந்துகொள்கிறது.
இந்திய பிரதமர் மோடி சிறந்த தலைவர். இந்தியா ஒரு வலுவான ஜனநாயக நாடு.
ஆனாலும், அது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி கொண்டிருக்கிறது. இந்தப் பணத்தை ரஷ்யா உக்ரைன் உடனான போருக்குப் பயன்படுத்துகிறது. அதனால், இது ஒரு 'மோடி போர்'." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.