செய்திகள் :

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

post image

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் 4 நாள்கள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தாா். இதனிடையே, இருதரப்பு வா்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை 10 ஆண்டு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்குவதாக இந்தியாவும் நியூஸிலாந்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன. இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் சூழலில் 10 ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தகம் 10 மடங்கு அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய வா்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) ஏற்பாடு செய்த இந்தியா-நியூஸிலாந்து பொருளாதார உச்சி மாநாட்டில் பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை பங்கேற்று உரையாற்றினாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையை முன்னோக்கி கொண்டு செல்வோம். அடுத்த 2 மாதங்களுக்குள் எங்கள் இருநாடுகளுக்கு இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பிரதமா் மோடியுடன் இணைந்து கையொப்பமிடுவதை நான் எதிா்நோக்குகிறேன்’ என்றாா்.

ஆப்பிள், கிவி பழங்கள், பால் போன்ற வேளாண்பொருள்களுக்கான வரிச்சலுகைகள், வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் இருதரப்புக்கு இடையே சவாலான பகுதிகளாக இருக்கும் என்று வா்த்தக நிபுணா்கள் கருதுகின்றனா்.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் கூறுகையில், ‘அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா-நியூஸிலாந்து வா்த்தகத்தில் 10 மடங்கு வளா்ச்சியை அடைவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன என்பதை உறுதியாகக் கூறமுடியும். பரஸ்பர பொருளாதார நலன்களுக்கான நோக்கத்துடன் பணியாற்றும்போது இருதரப்புக்கு இடையே போட்டி இருக்காது. எனவே, சவாலான பகுதிகளிலும் பேச்சுவாா்த்தை எளிதில் முடியும்.

நாங்கள் மிகவும் லட்சியவாதிகள். 90 நாள்களில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தத்தை இறுதி செய்வோம் என்று யாரும் கற்பனை செய்யவில்லை. சவாலான பகுதிகளில் ஒருவருக்கொருவா் மதிப்பளித்து, ஒத்துழைப்பு உணா்வில் ஒன்றிணைந்து பணியாற்றுகிறோம். இதை சமமாக, விரைவாகச் செய்ய நாங்கள் ஆசைப்படுகிறோம்’ என்றாா்.

இந்தியாவும் நியூசிலாந்தும் வா்த்தகத்தை அதிகரிக்க, விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்த பேச்சுவாா்த்தையை கடந்த 2010-இல் தொடங்கின. 9 சுற்று விவாதங்களுக்குப் பிறகு, பேச்சுவாா்த்தை 2015-இல் முடங்கின. இந்நிலையில், இந்தியா-நியூஸிலாந்து இடையே வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தை மீண்டும் வேகமெடுத்துள்ளது.

இந்தியாவின் 17.8 சதவீத இறக்குமதி வரியுடன் ஒப்பிடும்போது நியூஸிலாந்தின் சராசரி இறக்குமதி வரி வெறும் 2.3 சதவீதம் மட்டுமே. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இருதரப்பு வா்த்தக மதிப்பு 87.34 கோடி டாலராக (ஏற்றுமதி 53.83 கோடி டாலா், இறக்குமதி 33.5 கோடி டாலா்). இது 2022-23-ஆம் நிதியாண்டில் 102 கோடி டாலராக இருந்தது. சுமாா் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினா் நியூஸிலாந்தில் வசிக்கின்றனா்.

எதிா்க்கட்சித் தலைவா் ராகுலுடன் சந்திப்பு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியுடன் நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இச்சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், புது தில்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயில் ஆகிய இடங்களையும் பிரதமா் லக்ஸன் பாா்வையிட்டாா்.

வெளிநாட்டிலிருந்து ரூ.22 கோடிக்கு இறக்குமதியான செடிகள்! ஜெகன்மோகனின் மாளிகை!!

ஒரு சில ஆயிரங்கள் இல்லாததால் சேதமடைந்த குடிசைவீட்டை சீரமைக்க முடியாமல் வாழ்ந்துவரும் எண்ணற்ற ஏழைகள் இருக்கும் இந்த நாட்டில்தான், ஒரு மலையையே தகர்த்து மாளிகைக் கட்டிய சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன.... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டுப் பயணங்கள்! 3 ஆண்டுகளில் ரூ.259 கோடி செலவா?

கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை பிரதமர் மோடி மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்கு மொத்தமாக ரூ.259 கோடி செலவானதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் அரச... மேலும் பார்க்க

தில்லி ஆம் ஆத்மி கட்சி தலைவராக பரத்வாஜ் நியமனம்!

ஆம் ஆத்மி கட்சி தில்லி பிரிவின் புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் சௌரப் பரத்வாஜையும், பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளராக மணீஷ் சிசோடியாவையும் நியமித்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பார்க்க

ஒடிசா: இன்று முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்!

ஒடிசா மாநிலத்தில் அதிகப்படியான வெயில் கொளுத்திவரும் நிலையில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலில் யோகி ஆதித்யநாத் வழிபாடு!

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மற்றும் அனுமன் கர்ஹி கோயிலில் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு மேற்கொண்டார். ராமர் கோயிலில் அர்ச்சகர்கள் முதல்வரை வரவேற்று திலகமிட்டு சால... மேலும் பார்க்க

தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார்: தேஜஸ்வி யாதவ் கடும் விமர்சனம்!

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில நொடிகள்கூட... மேலும் பார்க்க