செய்திகள் :

வெளிநாட்டிலிருந்து ரூ.22 கோடிக்கு இறக்குமதியான செடிகள்! ஜெகன்மோகனின் மாளிகை!!

post image

ஒரு சில ஆயிரங்கள் இல்லாததால் சேதமடைந்த குடிசைவீட்டை சீரமைக்க முடியாமல் வாழ்ந்துவரும் எண்ணற்ற ஏழைகள் இருக்கும் இந்த நாட்டில்தான், ஒரு மலையையே தகர்த்து மாளிகைக் கட்டிய சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ருஷிகொண்டா மலையை தகர்த்துக் கட்டியிருக்கும் மாளிகைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ருஷிகொண்டா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தகர்த்து, ஜெகன்மோகன் ரெட்டி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் கட்டிய அரண்மனையின் விடியோ அண்மையில் வெளியாகி பேசுபொருளாகியிருந்தது.

இந்த அரண்மனையைப் பார்ப்பதற்கும், அரண்மனைக்குள்ளிருந்து பார்த்தால் கடல் பரப்பும், உண்மையிலேயே இப்படியொரு இடத்தை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாதோ என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.

விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ருஷிகொண்டா மலையின் ஒரு பகுதியை இடித்துத்தரைமட்டமாக்கி, அதில் மிகப்பெரிய அரண்மனையை சப்தமில்லாமல் கட்டியிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுத்து, அரண்மனையை பூட்டி சீல் வைப்பதா? அல்லது அதனை ஆந்திர அரசுக்குச் சொந்தமாக்குவதா என்று ஒரு பக்கம் சட்ட விவாதங்கள் நடந்து வருகின்றன.

வெளித்தோற்றமே மெய்மறந்து போகும் வகையில் இருக்கிறது. உள்கட்டமைப்பைப் பற்றி வரும் தகவல்களோ தங்கத்தால் இழைத்து செய்திருப்பதாகக் கூறுகிறது. இத்தாலி மார்பிள் கற்கள் தரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனவாம்.

வேறென்ன?

மலையைத் தகர்த்து சமநிலைப்படுத்த மட்டும் ரூ.95 கோடி செலவிடப்பட்டுள்ளதாம். இங்கு இருக்கும் மரம், செடி, கொடிகள் எல்லாமே வேறு எங்கும் பார்த்திராத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டிலிருந்து ரூ.22 கோடி செலவிட்டு செடிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிருக்கும் ஒரே ஒரு குளியல்தொட்டியின் விலை மட்டும் ரூ.25 லட்சம் என்றும், பொருத்தப்பட்டிருக்கும் குழாய்கள் மட்டும் ரூ.5 கோடிக்கு வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த அரண்மனையின் கட்டமைப்புகளைப் பார்க்கும்போது, இது முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் முதல்வர் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிராக இந்தக் கட்டடம் கட்டப்பட்டிருப்பதால், இது பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மலையைத் தகர்த்துக் கட்டப்பட்டிருக்கும் இந்த அரண்மனையிலிருந்து பார்த்தால் கடற்கரை தெரிகிறது. இந்த அரண்மனைக்குள் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி என அனைத்தும் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் விண்ணப்பிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த 2021ஆம் ஆண்டுமே மாதம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இதுபோன்ற எத்தனையோ மலைவாழ் கிராமங்கள் பல நூற்றாண்டுகாலமாக சாலை, குடிநீர், மின் வசதியின்றி இருக்கும் நிலையில், ஒரு சில ஆண்டுகளில் இப்படியோர் அரண்மனை ஒரு மலைப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டு, அதுவும் இது தொடர்பான எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் கட்டி முடிக்கப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: உள்விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகக் கூறி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.நீ... மேலும் பார்க்க

கழிவுநீர்த் தொட்டி தூய்மைப் பணியில் பலியானவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு! உச்ச நீதிமன்றம் கெடு!

கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம... மேலும் பார்க்க

தயிர் சாதம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் பலி; சிகிச்சையில் தாய்! என்ன நடந்தது?

ஹைதராபாத் அருகே தயிர் சாதம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் வெள்ளிக்கிழமை அதிகாலை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், குழந்தைகளின் தாயும் ஆசிரியருமான லாவண்யா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப... மேலும் பார்க்க

முதல்வர் யோகியின் நல்லாட்சி; விமர்சிக்கும் இணையவாசிகள்!

ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் ஒன்றிணைந்தால்தான், நல்லாட்சி அமையும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.உத்தரப் பிரதேசத்தில் `விகாஸித் பாரத் இளைஞர் நாடாளுமன்ற விழா 2025’ குறித்து... மேலும் பார்க்க

பஞ்சாப் போராட்டம்: 5 மாத உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயி!

ஹரியாணா எல்லையில் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை பஞ்சாப் அரசு அகற்றியது.குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், கடந்தாண்டு பிப்ரவரியில் போர... மேலும் பார்க்க

ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: எங்கு, எப்போது தெரியும்?

இந்த 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், அதுவும் நாளை சனி அமாவாசையன்று நிகழ்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வந்து முறைக்கும்போது தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே நாளை சூரிய கிரகண... மேலும் பார்க்க