அடுத்த தலாய் லாமா தோ்வு முறைப்படியே நடைபெறும்: கிரண் ரிஜிஜு
இந்திய அணிக்காக வரலாற்றுச் சாதனை படைத்த சூர்யவன்ஷி..!
யு-19 ஒருநாள் கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள், 2 டெஸ்ட் போடிகளில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெல்ல, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
அடுத்ததாக மூன்றவாது போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டி மழையின் காரணமாக 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 268/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தாமஸ் ரெவ் 76 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இந்திய அணி 34.3 ஓவர்களில் 274/6 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 14 வயதான இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 31 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 6 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடங்கும்.
இதன்மூலம் யு-19 இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவராக சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்திய வீரர்களில் இதற்கு முன்பாக மந்தீப் சிங் 8 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

ஐபிஎல் போட்டிகளிலேயே அசத்திய சூர்யவன்ஷி தற்போது இந்திய அணிக்காகவும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.