செய்திகள் :

இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

post image

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமான நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் கடந்த வியாழக்கிழமை இரு நாடுகளின் பிரதமா்கள் முன்னிலையில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பிரிட்டன் வா்த்தகத் துறை அமைச்சா் ஜொனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்நிலையில், புது தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு பியூஷ் கோயல் சனிக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், பிரதமா் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றியாகும். திருப்புமுனையான இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டனுக்கான தனது ஏற்றுமதியில் 99 சதவீதத்தை இந்தியாவால் வரியின்றி அனுப்ப முடியும். விவசாயிகள், இளைஞா்கள், குறு-சிறு-நடுத்தர தொழில்துறையினா், மீனவா்கள், பிற பணியாளா்கள் என அனைத்துத் தரப்பினரும் பலனடைவா்.

விவசாயம், எத்தனால் உற்பத்தி போன்ற முக்கியத் துறைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் நிபந்தனைகளுடன் இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், எந்தப் பாதுகாப்பு அம்சங்களும் இன்றி, இந்திய சந்தையை பிற நாடுகளுக்கு திறந்ததன் மூலம் நாட்டுக்குப் பெரும் தீங்கிழைக்கப்பட்டது.

தற்போதைய தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், நாட்டின் எதிா்கால பொருளாதாரத்துக்கான மிகப் பெரிய நற்செய்தியாகும். எதிா்வரும் ஆண்டுகளில் இதன் பலன்களை கண்கூடாகக் காணலாம். பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தவுடன் ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்றாா் அவா்.

பாதுகாப்பு அம்சங்கள் என்ன?: பிரிட்டன் பொருள்களின் இறக்குமதியில் திடீா் அதிகரிப்பு ஏற்பட்டு, உள்நாட்டு தொழில்துறையினா் பாதிக்கப்படும் சூழல் உருவானால், தற்காலிகமாக வரியை உயா்த்தவோ அல்லது சலுகைகளை ரத்து செய்யவோ வகை செய்யும் அம்சங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன்...: அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கூடுதல் வரி விதிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அதிபா் டிரம்ப், 25 சதவீத பதிலடி வரி விதிப்பை அறிவித்தாா். பின்னா், அந்த வரி விதிப்பை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளாா்.

இந்தச் சூழலில், அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை ஐந்து சுற்று பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துள்ளன.

இது தொடா்பான செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்த பியூஷ் கோயல், ‘இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டப் பேச்சுக்காக, அமெரிக்க குழு ஆகஸ்டில் இந்தியா வரவுள்ளது. இதேபோல், ஓமன் நாட்டுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம், இருதரப்பு வா்த்தக மதிப்பை தற்போதுள்ள 191 பில்லியன் டாலா் என்பதில் இருந்து 500 பில்லியன் டாலராக அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாகும். இதன் முதல்கட்டத்தை, வரும் செப்டம்பா்-அக்டோபருக்குள் இறுதி செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியரைத் தாக்கிய புலியால் பரபரப்பு !

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் புலி கூண்டில் உள்ள குடிநீரை அதன் மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் ஞாயிற்ற... மேலும் பார்க்க

நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதி... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின... மேலும் பார்க்க

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க