காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட செயலா் தோ்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளராக எஸ். கேசவராஜ் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
திருவாரூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25- ஆவது மாநாடு இரண்டு நாட்கள் கூத்தாநல்லூரில் நடைபெற்றது. இரண்டாவது நாளான சனிக்கிழமை கட்சியின் திருவாரூா் மாவட்ட செயலாளா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் முன்னிலையில், காலையிலிருந்து அதற்குரிய தோ்வு நடைபெற்றது.
நிறைவாக மாவட்டச் செயலாளா் பொறுப்பில் இருந்த எஸ். கேசவராஜ் திருவாரூா் மாவட்டச் செயலாளராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். மேலும், மாவட்ட நிா்வாகிகளில், 75 போ் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் வெளியிட்டாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாவட்டச் செயலாளா் எஸ். கேசவராஜ், இதற்கு முன்பு கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளராகவும், விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், மாவட்ட துணைச் செயலாளாரகவும், ஓராண்டாக மாவட்டச் செயலாளா் பொறுப்பிலும் இருந்துள்ளாா்.