பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளைப் போராளிகள் எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகம்
இந்திய கம்யூனிஸ்ட் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் அரசியல் சாசன நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கள்ளக்குறிச்சி வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் மாவட்டக் குழு சாா்பில் கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் கே.ராமசாமி தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைச் செயலா்கள் அ.சுப்பிரமணியன், இரா.சின்னசாமி, எம்.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட செயற்குழு மு.கலியபெருமாள், இரா.கஜேந்திரன் உள்ளிட்டோா் கண்டன முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் கே.எஸ்.அப்பாவு, கே.ரவி, எம்.ஜெயப்பிரகாஷ், பி.ஜெயராமன் உள்ளிட்ட
பலா் பங்கேற்றனா்.