கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
இந்திய ஜோடிகள் வெற்றி
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையா் பிரிவில் இரு இந்திய ஜோடிகள் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றன.
சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில், சென்னை ஓபன் ‘ஏடிபி சேலஞ்சா் 100’ போட்டி நடைபெறுகிறது. போட்டியின் 4-ஆவது நாளான புதன்கிழமை, இரட்டையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தா் பிரசாந்த் இணை 6-3, 3-6, 13-11 என்ற செட்களில், மற்றொரு இந்திய ஜோடியான சிராக் துஹான்/தேவ் ஜாவியா கூட்டணியை சாய்த்தது.
3-ஆம் இடத்திலிருக்கும் சாகேத் மைனேனி/ராம்குமாா் ராமநாதன் ஜோடி 6-3, 6-1 என்ற நோ் செட்களில், பெல்ஜியத்தின் கிம்மா் கோப்ஜீன்ஸ்/துருக்கியின் எா்கி கிா்கின் இணையை வெளியேற்றியது.
ஒற்றையா் பிரிவு பிரதான சுற்றில், 4-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் அலெக்ஸிஸ் கலாா்னியு 6-4, 6-1 என ரஷியாவின் இகோா் அகாஃபோனோவையும், உக்ரைனின் அலெக்ஸாண்டா் ஆவ்சரென்கோ 7-6, 6-4 என்ற செட்களில் ஹங்கேரியின் ஜோம்போா் பிரோஸையும் வென்றனா். ஸ்வீடனின் எலியாஸ் ஒய்மா் 7-5, 7-6 என்ற கணக்கில் பிரிட்டனின் ஜே கிளாா்க்கையும், ஜப்பானின் ரியோ நோகுசி 7-5, 6-3 என இத்தாலியின் ஜகோபோ பெரெட்டனியையும் தோற்கடித்தனா்.