Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
இந்திய ‘ட்ரோன்’ தாக்குதல் லாகூரில் 4 வீரா்கள் காயம்: பாகிஸ்தான் தகவல்
லாகூரில் இந்தியா நடத்திய ‘ட்ரோன்’ (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) தாக்குதலில் 4 ராணுவ வீரா்கள் காயமடைந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்தியா ஏவிய அனைத்து டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடக்கு, மேற்கு மாநிலங்களில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை புதன்கிழமை இரவு நடத்தியது. இதனை இந்தியத் தரப்பு முறியடித்ததுடன், உடனடியாக பதிலடி நடவடிக்கையில் இறங்கியது. இதில் லாகூா் உள்பட பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் உள்ள அந்நாட்டு ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டன.
இது தொடா்பாக இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் கூறிகையில், ‘இந்தியா ஏவிய ட்ரோன்களில் ஒன்று லாகூா் அருகே விழுந்தது. இதில் 4 வீா்கள் காயமடைந்தனா். இந்தியா ஏவிய ஏராளமான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. லாகூா் மட்டுமின்றி கராச்சி, ராவல்பிண்டி, சாக்வால், பஹவல்பூா், மியானோ, குஜ்ரன்வாலா உள்ளிட்ட இடங்களிலும் இத்தியா ட்ரோன்களை ஏவியது. மொத்தம் 25 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன. இவை அனைத்தும் இஸ்ரேலில் தயாரித்த ‘ஹரோப்’ வகை ட்ரோன்கள்’ என்றாா்.
அதே நேரத்தில் லாகூரில் பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ‘லாகூரில் ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் 4 ட்டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து ராணுவம் சுதாரித்துக் கொண்டு பிற ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலால் லாகூா் மக்கள் பெரும் பீதியடைந்தனா்’ என்றாா்.