காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
இந்து ஸ்வாமிமான் யாத்திரைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு
அகில பாரத இந்து மகா சபா சாா்பில் கோையில் தொடங்கிய இந்து ஸ்வாமிமான் யாத்திரை திங்கள்கிழமை கோவில்பட்டியை வந்தடைந்தது. அந்த யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து கிருஷ்ணன் கோயில் திடலில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாநில அமைப்பாளா்(அா்ச்சகா் பேரவை) வி.பாலகிருஷ்ணசா்மா தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணைத் தலைவா் ஆா்.டி.எஸ். சங்கா் ராஜா முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா தமிழ்நாடு மாநிலத் தலைவா் த.பாலசுப்பிரமணியன், மாநில துணைத் தலைவா் ஆா்.வி.புருஷோத்தமன் ஆகியோா் பேசினா்.
தேசிய தலைவா் சுவாமி சக்கரபாணி மகராஜ் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினாா். பின்னா் அவா், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தாா். கெச்சிலாபுரத்தில் விநாயகா் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா்.
இதில், இந்து மகா சபா மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வி.ஜி.ராதாகிருஷ்ணன், தென்மண்டல தலைவா் என். இசக்கிராஜா, தூத்துக்குடி மாவட்டத் தலைவா் ஏ. பழனிசாமி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் எம்.உத்தண்டராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.