இந்தோனேசிய பெண்ணை மணந்த நாகை இளைஞா்
நாகை கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும் இந்தோனேசியா நாட்டைச் சோ்ந்த பெண்ணுக்கும் ஹிந்து முறைப்படி திருமணம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த கண்ணதாசன் - மகாலெட்சுமி தம்பதியின் மகன் ஜெசிந்த்குமாா். இவா், சிங்கப்பூரில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பொறியியல் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறாா்.
அதே நிறுவனத்தில் பணியாற்றிய இந்தோனேஷியாவைச் சோ்ந்த பொறியாளா் கிரேஸ் வீல்டி ராபா என்ற பெண்ணுடன் ஜெசிந்த்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனா்.
இருவரும் தங்கள் பெற்றோா் சம்மதத்தை பெற்றனா். இதைத்தொடா்ந்து ஹிந்து முறைப்படி கிரேஸ் வீல்டி ராபாவிற்கும், ஜெசிந்த்குமாருக்கும் திருமணம் நாகையில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.