செய்திகள் :

இந்த வாரம் உங்க ராசிக்கு எப்படி?

post image

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிசம்பர் 20 - 26) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் கலகலப்பு கூடும். கடமைகளை உணர்ந்து செயல்படுவீர்கள். பிறரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். தொழிலில் சிறப்பான வளர்ச்சியைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பிரச்னைகள் குறையும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு வருமானம் பெருகும்.

அரசியல்வாதிகள் கவனத்துடன் செயல்படுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு ஆன்மிகச் சிந்தனைகள் மேலோங்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உறவினர்களிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். வருமானம் கூடும். சேமிக்கத் தொடங்குவீர்கள். எதிரிகளையும் வசப்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். விவசாயிகள் கால்நடைகள் பராமரிப்பில் அக்கறை செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினர் அங்கீகாரத்துக்காகச் சிரமப்படுவீர்கள். பெண்கள் கோபத்தைக் குறைப்பீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில்

ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பிரச்னைகள் தீரும். புதிய பாதையில் பயணிப்பீர்கள். கடன்கள் வசூலாகும். உங்கள் செயல்களுக்கு அரசுத் துறையினர் உதவுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்தவும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் சிறிது மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். கலைத் துறையினர் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனத்துடன்

ஈடுபடவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்குகளில் சமாதான முடிவு ஏற்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்ய நேரிடும்.

உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்குப் பரிசு கிடைக்கும். பெண்களுக்கு பண வரவு உண்டு. மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமாக இருக்கும்.

சந்திராஷ்டமமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலைத் திறம்பட நடத்துவீர்கள். உடனிருப்போரின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வைக் காண்பீர்கள். கடன்களை அடைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைள் நிறைவேறும். வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் தேவைகளைப் புரிந்துகொள்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் வெற்றி வாகை சூடுவீர்கள். கலைத் துறையினர் அவசியப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் நற்பெயரை எடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். உங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கும். சரியான முடிவுகளை எடுப்பீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகள் தனித்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டு. விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பயணம் அதிகரிக்கும். கலைத் துறையினரின் புகழ் உயரும். பெண்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

மதிப்பும் மரியாதையும் உயரும். கோபம் கொள்ள மாட்டீர்கள். சுப காரியங்களை நடத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு தக்க தருணத்தில் முடிப்பீர்கள். வியாபாரிள் புதிய யுக்தியுடன் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளுக்குச் செலவழிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினர் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் உள்ளோரை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் இருக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள். முயற்சியைத் தீவிரப்படுத்துவீர்கள். நேர்வழியில் சிந்திப்பீர்கள். வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அனுபவ

சாலிகளின் வழிகாட்டுதலின்படி நடப்பீர்கள்.

வியாபாரிகள் சிறு முதலீட்டில் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு உயரும். கலைத் துறையினர் எதிர்பார்த்த வருவாயைக் காண்பீர்கள். பெண்கள் கண்ணியத்துடன் நடப்பீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பண வரவு உண்டு. சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பீர்கள். சிந்தனையில் தெளிவுடனும் தன்னம்பிக்கையுடனும் காரியமாற்றுவீர்கள். வேகத்தையும் விவேலத்தையும் கூட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிளின் பேச்சை கேட்பீர்கள். வியாபாரிகள் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகை பெற தாமதமாகும்.

அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத் துறையினர் திறமைகளை அதிகரிப்பீர்கள். பெண்கள் குடும்பப் பொறுப்புகளைச் சுமப்பீர்கள். மாணவர்கள் பிறருக்கு உதவுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அலைச்சல், திரிச்சல் இல்லாமல் காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் சகஜ நிலையில் பழகுவீர்கள். புதியவர்களிடம் ரகசியங்களைப் பகிர வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் சுமாரான நிலையே காணப்படும். விவசாயிகள் கவனத்துடன் இருக்கவும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 20, 21, 22.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். பொருளாதார வளர்ச்சி மிதமாக இருக்கும். இல்லத்துக்கு நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். புனித ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் நன்முறையில் காரியமாற்றுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு சந்தையில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் புதிய பயணங்களால் நன்மை அடைவீர்கள்.

பெண்கள் உடன்பிறந்தோரிடம் உதவிகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் மன அமைதியைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 23, 24.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வருமானம் சீராக இருக்கும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். போட்டிகளில் சுலபமாக வெற்றி பெறுவீர்கள். மனதுக்கினிய பயணம் மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல யோகம் உண்டாகும்.

விவசாயிகள் மாற்றுப்பயிர்களால் லாபம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத் துறையினர் கடமையில் கண்ணாக இருப்பீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்துவரவும்.

சந்திராஷ்டமம்}டிசம்பர் 25, 26.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புதிய பாடல்!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது. இப்படம் அடு... மேலும் பார்க்க

அடுத்த தளபதியா? கிண்டலாக பதிலளித்த சூரி!

நடிகர் சூரி விடுதலை - 2 படத்திற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனின் 4... மேலும் பார்க்க

விடாமுயற்சியில் இணைந்த பிரபலம்!

விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிப் படப்பிடிப்பில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப... மேலும் பார்க்க

கங்கனாவின் எமர்ஜென்சி படம் வெளியாவதில் மகிழ்ச்சி..!

கங்கனாவின் அற்புதமான எமர்ஜென்சி திரைப்படம் வெளியாக மத்திய தணிக்கைச் சான்றிதழ் வாரியம் அனுமதியளித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் ஷ்ரேயாஷ் தல்படே கூறியுள்ளார். எமர்ஜென்சி திரைப்படத்தை தயாரித்த... மேலும் பார்க்க

புதிய திரைக்கதையுடன் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹான் புதிய திரைக்கதை குறித்து பதிவிட்டுள்ளார்.தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் கூல... மேலும் பார்க்க

நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சாப்பிடக்கூடாதா? - நம்பிக்கையும் உண்மையும்!

சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறதா? இது வயதானவர்களை மட்டும்தான் பாதிக்குமா? நீரிழிவு நோய் பற்றிய தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் பெங்களூரு அஸ்தர் சிஎம்ஐ மருத்துவமனை சுரப்... மேலும் பார்க்க