செய்திகள் :

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

post image

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் மூன்றாவது மற்றும் இறுதி சீசன் நெட்ஃபிளிக்ஸில் நாளை(ஜூன் 27) வெளியாகிறது.

தீபக் குமார் மிஸ்ரா இயக்கத்தில் ஜிஜேந்திர குமார், நீனா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ள பஞ்சாயத்து சீசன் 4 இணையத் தொடரை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் வெளியான ரெய்டு - 2 படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று(ஜூன் 26) வெளியாகியுள்ளது.

ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் ஸ்ரீநாத் பாசி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள ஆசாதி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

வரலட்சுமி சரத்குமார், சுஹாசினி, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தி வெர்டிக்ட் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மலையாள மொழிப்படங்களான பாரிவார், லவ்லி படங்கள் அமேசான் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றன.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான ஜின் தி பெட் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் யுகி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.

இதையும் படிக்க: ராஷ்மிகா மந்தனாவை சந்திக்க வேண்டுமா? புதிய படத்தின் தலைப்பில் ட்விஸ்ட்!

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகளும் தடுமாற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து தடுமாற்றத்துடன் விளையாடி வந்தது. பிரிட்ஜ்டவுன் நகரில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

அரையிறுதியில் மோதும் பாலினி - ஸ்வியாடெக்

ஜொ்மனியில் நடைபெறும் மகளிருக்கான பேட் ஹோம்பா்க் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி - போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் மோதுகின்றனா். காலிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில்... மேலும் பார்க்க

அல்-நசீர் அணியிலேயே 2 ஆண்டு ஒப்பந்தம் நீட்டிப்பு! ரொனால்டோ அறிவிப்பு!

சௌதி லீக்கில் அல்-நசீர் அணியிலேயே 2 ஆண்டு ஒப்பந்தத்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ நீட்டித்துள்ளார்.உலக கால்பந்து ஜம்பவான் என்றழைக்கப்படும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சௌதி லீக்கில் அ... மேலும் பார்க்க

ரஷ்மிகா மந்தனாவை சந்திக்க வேண்டுமா? புதிய படத்தின் தலைப்பில் ட்விஸ்ட்!

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார்.தெலுங்கு, தமிழ், ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம்வரும் ரஷ்மிகா மந்தனா, தனுஷ், நாகார்ஜுனா நடிப்பில் குபே... மேலும் பார்க்க

நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் திடலில் மெஸ்ஸியின் பெயர்! சொந்த ஊரின் கிளப்புக்கு திரும்புகிறாரா?

மெஸ்ஸி சிறுவயதில் விளையாடிய விளையாட்டு திடலுக்கு அவரது பெயரை சூட்டப்பட்டுள்ளது. ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி 13-ஆவது வயது முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடினார். அதற்கு முன்புவரை அவரது சொந்த... மேலும் பார்க்க