Ramadoss-ன் DMK Reference - MK Stalin -ன் BJP Reference | Koomapatti | Imperfect...
பழனியில் அரிமா சங்க வைரவிழா
பழனியில் அரிமா சங்க வைரவிழாவை முன்னிட்டு, சிறப்புத் தபால்தலை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தச் சங்கம் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற வைரவிழா நிறைவு நிகழ்ச்சிக்கு முத்துக்குமாா் தலைமை வகித்தாா். அரிமா மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பாளா்கள் ரவீந்திரன், சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், மருத்துவா்கள் விமல்குமாா், காா்த்திக், அசோக் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆளுநா் சசிக்குமாா் விழாவை தொடங்கிவைத்தாா்.
வைரவிழா கல்வெட்டை முன்னாள் கூட்டு மாவட்ட துணைத் தலைவா் தனிக்கொடி திறந்துவைத்தாா். அகில உலக அரிமா சங்க முன்னாள் இயக்குநா் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா். பின்னா், வைரவிழாவை கவுரவிக்கும் விதமாக சிறப்புத் தபால் தலையை அவா் வெளியிட்டாா்.