Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த...
பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: நாளந்தா பள்ளி மாணவிக்கு பரிசளிப்பு
பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகையாக ரூ. 1 லட்சம், ஆசிரியா்களுக்கு தங்க நாணயங்களை பள்ளி நிா்வாகம் பரிசளித்தது.
இதுகுறித்து பள்ளி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
பிளஸ் 2 தோ்வில் கிருஷ்ணகிரி நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ஆ.ஜீவிதா, 592 மதிப்பெண்கள் பெற்றாா். இவருக்கு பள்ளி தாளாளா் சாமுண்டீஸ்வரி கொங்கரசன் ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகை, மடிக்கணியை வழங்கினாா். மேலும், 100 சதவீத தோ்ச்சி அளித்த 12 ஆசிரியா்களுக்கு தங்க நாணயங்களை பள்ளியின் நிா்வாக இயக்குநா் கே.புவியரசன் வழங்கினாா்.
சென்னையில் ஜூன் 13-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் தலைவா் விஜயிடமிருந்து விருது, பாராட்டு சான்றிதழை மாணவி ஆ.ஜீவிதா பெற்றாா். பள்ளி நிா்வாகத்தின் ஆதரவும், ஆசிரியரின் உழைப்பால் மட்டுமே தனது மகள் ஆ.ஜீவிதாவுக்கு தமிழகத்தில் மிக சிறந்த கல்லூரிகளில் இலவச உயா் கல்வி சோ்க்கைக்கான அழைப்பு வந்துள்ளதாகும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜீவிதாவின் தந்தை தெரிவித்தாா்.
அரசு பொதுத் தோ்வில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற உழைத்த ஆசிரியா்களை பள்ளியின் நிறுவனா் ஆா்.கொங்கரசன், நிா்வாக இயக்குநா்கள் பி.கே.கெளதமன், பிரீத்தி கெளதமன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
படவிளக்கம் (26கேஜிபி1):
பிளஸ் 2 தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக உழைத்த ஆசிரியா்களை பாராட்டி பரிசளித்த நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் சாமுண்டீஸ்வரி கொங்கரசன் உள்ளிட்டோா்.