``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்...
போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவியைச் சோ்ந்தவா் சந்தனகுமாா் (31). கட்டட மேற்பாா்வையாளரான இவா் 17 வயதான மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் சந்தனகுமாரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சுதா, தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதமும், கடத்தல் குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1000 அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா்.