இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
விஜய் பிரசாத், சார்லி உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் அய்யப்பன் சுப்பிரமணி இயக்கத்தில் வெளியான ரூபன் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
கண்ணுராமசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரவீனா ரவி நடிப்பில் வெளியான வட்டார வழக்கு திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணலாம்.
ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் நீல் கதை எழுதி, சூரி இயக்கிய திரைப்படம் பஹீரா. இப்படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்துள்ளார். பஹீரா திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இதையும் படிக்க: 2024 - சிறந்த மலையாளப் படங்கள்!
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் திரைப்படம், நாளை(டிச.27) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
'கயல்' ஆனந்தி பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான ஒயிட் ரோஸ் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(டிச.27) வெளியாகிறது.
பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் இரண்டாம் பாகத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
கார்த்திக் ஆர்யன், த்ரிப்தி திம்ரி, வித்யா பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பூல் பலாயா - 3 என்ற ஹிந்தி மொழிப்படம் நாளை(டிச. 27) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.