செய்திகள் :

`இன்னும் வரியை உயர்த்துவேன்' - இந்தியாவை எச்சரிக்கும் ட்ரம்ப்; காரணம் என்ன?

post image

உலக நாடுகளுக்கு அமெரிக்கா தற்போது விதித்து வரும் பரஸ்பர வரியில் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறோம் என்று அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் எச்சரிப்பது என்ன?

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் இந்தியா மீதான வரி குறித்து எச்சரித்துள்ளார். "இந்தியா மிகப்பெரிய அளவில் ரஷ்ய எண்ணெய்களை வாங்குவது மட்டுமல்ல, அவர்கள் வாங்கிய எண்ணெயை பெரிய லாபத்திற்கு சந்தையில் விற்று வருகிறது.

ரஷ்யாவின் போர் இயந்திரத்தால் உக்ரைனில் பல மக்கள் கொல்லப்படுவது குறித்து இந்தியாவிற்கு கவலை இல்லை. இதனால், நான் இந்தியாவின் மீதான வரியை இன்னும் உயர்த்துவேன்" என்று கூறியுள்ளார்.

மோடி - புதின்
மோடி - புதின்

இதை தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது ட்ரம்ப் விதித்திருக்கும் 25 சதவிகித வரியே, மற்ற பிற நாடுகளை விட அதிகமான வரி ஆகும்.

'இன்னும் வரி அதிகரிப்பேன்' என்று ட்ரம்ப் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ட்ரம்பின் இந்தக் கூற்றுக்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

Russia: ``அணுசக்தி தொடர்பாக பேசும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்'' - ட்ரம்புக்கு பதிலளித்த ரஷ்யா

உக்ரைன் ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, `ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு... மேலும் பார்க்க

இந்தியா - ரஷ்யா வணிகம்: ட்ரம்பின் புது எச்சரிக்கை; அமெரிக்காவை விளாசும் இந்திய அரசின் புள்ளிவிவரம்

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால், அமெரிக்கா, இந்தியா மீது 25 சதவிகித வரியுடன் கூடுதலாக அபராதமும் விதித்துள்ளது. நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இற... மேலும் பார்க்க

``என்னுடைய கல்லறையை நானே தோண்டுகிறேன்'' - இஸ்ரேல் பணயக் கைதி கதறல்; நெதன்யாகு, ஹமாஸ் ரியாக்‌ஷன்?

"என்னுடைய கல்லறையை நானே தோண்டிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும், என்னுடைய உடல்நிலை மோசமாகி கொண்டிருக்கிறது. என்னுடைய கல்லறைக்கு நானே நடந்துப்போகிறேன். என்னை விடுவிக்க வேண்டிய நேரமும், என்னுடைய குடும... மேலும் பார்க்க

`விருப்பத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது?' - உங்கள் கருத்தென்ன? #கருத்துக்களம்

கடந்த மாத இறுதியில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இந்தியாவில் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது (தற்போது 18 வயது) குறித்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார். அவர் முன்வைத்திருக்கும்... மேலும் பார்க்க

`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்

ட்ரம்பின் அமெரிக்க அரசு இந்தியா மீது 25 சதவிகித வரியை விதித்துள்ளது. கூடுதலாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால், அதற்கும் அபராதத்தை விதித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பதில... மேலும் பார்க்க

OPS: ``நான் `B' டீம் இல்லை, வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஓ.பன்னீர் செல்வம் காட்டம்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்தவித அரசியலும் இல்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர... மேலும் பார்க்க