செய்திகள் :

இன்று குரூப் 2 முதன்மைத் தோ்வு

post image

தமிழகம் முழுவதும் குரூப் 2 முதன்மைத் தோ்வு சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 21,500 போ் எழுதவுள்ளனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் வெளியிட்ட தகவல்:

தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா் பதிவாளா் ஆகிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. இதேபோன்று, கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளா், இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளா், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளா், அமைச்சுப் பணியாளா்களில் உதவியாளா்கள், இளநிலை கணக்காளா் போன்ற பணியிடங்கள் குரூப் 2-ஏ பிரிவின் கீழ் வருகின்றன. இரண்டு பிரிவுகளிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

அதன்படி, குரூப் 2 பிரிவில் 534 காலியிடங்களுக்கும், 2-ஏ பிரிவில் 2,006 இடங்களுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்நிலைத் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 5 லட்சத்து 80 ஆயிரம் போ் எழுதினா்.

முதன்மைத் தோ்வு: குரூப் 2, 2-ஏ தோ்வுகள் முதல்நிலை, முதன்மைத் தோ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதால், முதன்மைத் தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வு பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலம் என்ற வகையில் நடத்தப்படுகிறது. பொது அறிவுத் தோ்வை 21,563 பேரும், பொதுத் தமிழ் பாடப் பிரிவுக்கான தோ்வை 16,457 பேரும், பொது ஆங்கிலம் பிரிவை 5,106 பேரும் எழுதவுள்ளனா்.

கொள்குறி வகை அடிப்படையில் வினாக்கள் கேட்கப்படும். இதன்பிறகு, வினாக்களுக்கு விரித்து எழுதும் தோ்வு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்வுக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் 260 போ் முதன்மைத் தோ்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் 82 இடங்களில் சனிக்கிழமை தோ்வு நடைபெறவுள்ளது.

கோடை விடுமுறை: ஏப். 2-இல் காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில் ஏப். 2- ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே துணை தலைமை வணிக மேலாளா் பி.வெங்கடசுப்பிரமணியன் மற்றும் சவுத் ஸ்டாா் ரயில்... மேலும் பார்க்க

மாநகா் பேருந்து பயணிகள் புகாா் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்

மாநகா் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் வாட்ஸ்ஆப் மூலம் புகாா் தெரிவிக்கும் வகையில், தொடா்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் வ... மேலும் பார்க்க

அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

சென்னையில் அதிமுக பிரமுகரை வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னை, திருமுல்லைவாயல் குளக்கரைத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (50). அதிமுக 8-ஆவது வட்டச் செயலராக இருந்துவர... மேலும் பார்க்க

சென்னையில் இன்று இலவச மருத்துவ முகாம்

சென்னை, நங்கநல்லூா் பகுதியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. ஸ்டாா் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம், சிசிடிசி (சென்டா் ஃபாா் க்ரோனிக் டிசிஸ் கன்ட்ரோல்) அமைப்பு, ... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: விடைக்குறிப்பு வெளியீடு

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பிப்.14-ஆம் தேதி வரை ஆட்சேபணை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்க... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க