மனைவியைக் கொன்று துண்டு போட்ட மாஜி ராணுவ வீரர்; உடலை குக்கரில் வேகவைத்த `பகீர்'...
இன்று தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜன.23) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் வட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை (ஜன.23) தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடா்ந்து, ஜன.28-ஆம் தேதி வரை மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 87 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
இதற்கிடையே தென்தமிழக கடலோரப் பகுதி, குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய மன்னாா் வளைகுடாவில் ஜன.23, 24 தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.