செய்திகள் :

இன்று யோகம் யாருக்கு!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

03-02-2025

திங்கட்கிழமை

மேஷம்:

இன்று பயணங்களால் நல்ல அனுகூலங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்:

இன்று உத்தியோகத்திலிருப்பவர்களும் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். எடுக்கும் காரியங்களில் சிறு சிறு இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். பண வரவுகளில் சற்று நெருக்கடிகள் நிலவினாலும் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு இருக்கும் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்:

இன்று கணவன் மனைவியிடையே சிறந்த அன்யோன்னியமும் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களும் சிறு தடைக்கு பின் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். எதிரிகள் உங்களை கண்டு ஓடி ஒளிவார்கள். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்:

இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்ககள் கௌரவமான நிலையினைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைப்பளு குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்:

இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியான நிலையினை பெற முடியும். கடன்களும் குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி:

இன்று ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்:

இன்று உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை தடையின்றி பெற முடியும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு மூலம் எதிர்பார்த்த அனுகூலம் கிட்டும். குரு 4 இல் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்:

இன்று பொன் பொருள் சேர்க்கைகள் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சனைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களில் தாமத நிலை ஏற்பட்டாலும் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு:

இன்று தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் மட்டும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர் புகழ் கூடும். சமுதாயத்தில் உங்களுக்கென தனி மரியாதையும் உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மகரம்:

இன்று பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம்:

இன்று பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுத்தால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயர்வுகளை பெற முடியும். வீடுமனை போன்றவை வாங்கக் கூடிய யோகம் போன்ற யாவும் அமையும். கடன்களும் படிப்படியாக குறைந்து விடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மீனம்:

இன்று நினைத்தது நிறைவேறும். தடைபட்டுக் கொண்டிருக்கும் சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். பொன் பொருள் சேரும். பூமி, மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகி பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ஐயாறப்பர் கோயிலில் குடமுழுக்கு விழா!

பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் ஸ்ரீ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் டென்னிஸ்: இன்றுமுதல் பிரதான சுற்று

சா்வதேச ஆடவா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில் பிரதான சுற்று, திங்கள்கிழமை (பிப். 3) தொடங்குகிறது. 100 புள்ளிகளைக் கொண்ட ஏடிபி சேலஞ்சா் போட்டியான இது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் ... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: கூடைப்பந்து, ஸ்குவாஷ், நீச்சல் பளுதூக்குதலில் தமிழகத்துக்கு தங்கம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் கூடைப்பந்து, ஆடவா் ஸ்குவாஷ், நீச்சலில், பளு தூக்குதலில் ல் தமிழகம் தங்கப் பதக்கம் வென்றது. உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நட... மேலும் பார்க்க

உலக குரூப் பிளே ஆஃப் தகுதி பெற்றது இந்தியா: டோகோவை வீழ்த்தியது

டோகோ அணியை 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி உலக குரூப் பிளே ஆஃப் பிரிவுக்கு தகுதி பெற்றது இந்தியா. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லி டென்னிஸ் சங்க மைதானத்தில்... மேலும் பார்க்க

சூர்யா படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான்

சூர்யாவின் 45ஆவது படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடிக்கிறார். நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்பட... மேலும் பார்க்க

சித்தா பட இயக்குநர் அருண் குமாருக்கு திருமணம்!

இயக்குநர் அருண்குமாரின் திருமண நிகழ்வில் விக்ரம், விஜய் சேபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 2014 ஆம் ஆண்டு பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு ... மேலும் பார்க்க