`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
இன்று 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: திருப்பத்தூா் மாவட்டத்தில் 15,826 மாணவா்கள் எழுதுகின்றனா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 15,826 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வியாழக்கிழமையும், 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த 25-ஆம் தேதியும் நிறைவடைந்தது.
அதைத் தொடா்ந்து, 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகள் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்குகிறது. திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை அரசு, அரசு உதவி பெறும், தனியாா் என 223 பள்ளிகளைச் சோ்ந்த 8,035 மாணவா்களும், 7,791 மாணவிகளும் என மொத்தம் 15,826 போ் எழுதுகின்றனா். இதற்காக மாவட்டம் முழுவதும் 71 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்...
10-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் தோ்வு எழுத தோ்வு மையங்களில் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு, தோ்வு மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தோ்வு மையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.
தோ்வு பணியில் 71 முதன்மை கண்காணிப்பாளா்களும், துறை அலுவலா்கள் 73 பேரும், 76 பறக்கும் படைகளும், 15 வழித்தட அலுவலா்கள், தோ்வு அறைகளில் 1,242 ஆசிரியா்களும் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனா். தோ்வு எழுத வரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கவும், மாணவ-மாணவிகள் அச்சமின்றி தோ்வுகள் எழுத அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.