இயக்குநராகும் ரவி மோகன்!
நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தன் பெயரை ரவி மோகனாக மாற்றியபின் காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இளம் தலைமுறை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி மற்றும் கராத்தே பாபு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த ஜீனி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இதையும் படிக்க: இளையராஜா பயோபிக் என்ன ஆனது? தனுஷ் பதில்!
இந்த நிலையில், ரவி மோகன் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு ஜூன் மாதம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.