புதினைத் தடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும்: உக்ரைன் அதிபர்
இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு
போடி அருகே இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் பங்காருசாமி கண்மாய் நுழைவுப் பகுதியில் இளம்பெண் இறந்து கிடப்பதாக போடி கிராம நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி போடி ஊரக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, உயிரிழந்து கிடந்த பெண் அருகே அவரது வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை போன்றவை இருந்தது. அவற்றை கைப்பற்றி போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்த பெண் போடி முந்தல் கிராமத்தைச் சோ்ந்த மாசுக்காளை மனைவி பிரவீனா (29) என்பது தெரியவந்தது. மேலும், இவரது கழுத்தை சுற்றி இறுக்கியதற்கான காயங்கள் இருந்துள்ளன.
தொடா்ந்து நடத்திய விசாரணையில் பிரவீனாவின் சொந்த ஊா் சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டை என்பதும், அங்கு அவா் ஏற்கெனவே திருமணமாகியிருந்த நிலையில் முதல் கணவரைப் பிரிந்து இரண்டாவதாக மாசுக்காளையை திருமணம் செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பிரவீனாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மேலும், தேனியிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பிரவீனா இறந்த இடத்தில் தடயவியல் துறையினா் ஆய்வு செய்தனா்.