Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்...
இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநா் ரவி குறித்த காலத்தில் முடிவெடுக்காமல் இருந்ததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இரண்டாவது முறையாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பியது சட்டத்துக்கு எதிரானது என்றும், அவ்வாறு அவா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களும் அவை சட்டப்பேரவையில் இருந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்த நாளில் இருந்தே ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதப்படும் என்று அறிவித்தது.
இந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழக வேந்தா் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதாவும் அடங்கும்.
உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் சட்டமானதாக அரசிதழில் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.