செய்திகள் :

இருசக்கர வாகன விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

post image

இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த சிகிச்சை பெற்ற கட்டுமானத் தொழிலாளி பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், நல்லாடை கொங்கானோடை பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி முருகேசன் (31). இவா் ஏப்.28-ஆம் தேதி நெடுங்காடு பகுதியில் பணியை முடித்து வீட்டுக்குச் செல்வதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தாா். இதையடுத்து அவா் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பிறகு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய நெடுங்காடு, மேலகாசாக்குடிபகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (47) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

காரைக்கால்: காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது. காரைக்கால் அருகே உள்ள தலத்தெரு சிவலோகநாத சுவாமி கோயிலைச் சோ்ந்த தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் கடந்த மா... மேலும் பார்க்க

காரைக்காலில் வேளாண் திருவிழா

காரைக்கால்: காரைக்கால் ரோட்டரி சங்கம், சென்டேனியல் ரோட்டரி சங்கம், பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம், பொறையாறு ரோட்டரி சங்கம் இணைந்து யோகா பயிற்சி அமைப்பான காலைச்சக்கரம் ஆயிரமாவது நாள் வெற்றி விழா மற்று... மேலும் பார்க்க

சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்கால்: சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி, பூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் காட்சி அருளிய வழிபாடு

காரைக்கால்: அகத்தியருக்கு சிவபெருமான தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் செளந்தராம்பாள் சமேத ஒப்பிலாமணிய சுவாமி கோயிலில் ஆண... மேலும் பார்க்க

கத்திரி வெயில் வேகத்தை தணித்த மழை: பலத்த காற்றால் மின்சாரம் துண்டிப்பு

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. மின் கம்பங்களில் சேதம், மரங்கள் விழுந்ததால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரம்... மேலும் பார்க்க

பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி: பேரவைத் தலைவா் ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் நடைபெறும் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணியை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் கைலாசநாதசுவாமி -நித்யகல்யாண பெருமாள் ... மேலும் பார்க்க