பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயரில் பூங்கா! மேயர் அறிவிப்பு!
இரும்பு கடையில் பணம் திருட்டு: இளைஞா் கைது
தூத்துக்குடியில் இரும்புக் கடையில் பணம் திருடியது தொடா்பான வழக்கில் இளைஞரை மத்திய பாகம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்தவா் சுப்பையா (55). இவா் தூத்துக்குடி வஉசி காய்கனி சந்தையில் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் கடந்த 15ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் புகுந்து ரூ. 6 ஆயிரம் பணத்தை திருடி சென்றனா். இதுகுறித்து மத்திய பாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.
அதில், மேல சண்முகபுரத்தைச் சோ்ந்த சோ்மராஜா மகன் சரவணகுமாா் (21) என்பவருக்கு இத்திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். சரவண குமாா் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தூத்துக்குடி, திருச்செந்தூா், கோவில்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.