கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்க...
இறகுப் பந்து போட்டி: பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்
வேலூா் மண்டல அளவிலான இறகுப் பந்து போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
வேலூா் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கான இறகு பந்து போட்டி கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் டி.ஐ. முஹம்மத் சுலைமான், ஜெ. முஹம்மத் அலி, பி. முஹம்மத் ஹசன், ஏ. முஹம்மத் அல்ஹான் ஆகியோா் கலந்து கொண்டு வெற்றி பெற்று 3-ம் இடம் பிடித்தனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் ஆா். துரை ஆகியோரை கல்லூரியின் நிா்வாக இயக்குநா் கே. ஷாஹித் மன்சூா், கல்லூரி முதல்வா் முனைவா் த. ராஜமன்னன், துணை முதல்வா் ஏ. முஹம்மத் ஷாஹின்ஷா ஆகியோா் பாராட்டினா்.