செய்திகள் :

இறுதிச்சுற்றில் சபலென்கா - கீஸ் பலப்பரீட்சை

post image

மெல்போா்ன் : ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

முன்னதாக அரையிறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீராங்கனையுமான சபலென்கா 6-4, 6-2 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, தனது நெருங்கிய தோழியும், போட்டித்தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருந்தவருமான ஸ்பெயினின் பௌலா படோசாவை வீழ்த்தினாா்.

இருவரும் 8-ஆவது முறையாக மோதிக்கொண்ட நிலையில், சபலென்கா 6-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

அரையிறுதியின் மற்றொரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 19-ஆம் இடத்திலிருக்கும் மேடிசன் கீஸ் 5-7, 6-1, 7-6 (10/8) என்ற செட்களில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி, அவருக்கு அதிா்ச்சி அளித்தாா்.

இந்த ஆட்டம் 2 மணி நேரம் 35 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில் அரையிறுதி ஆட்டத்தின் வெற்றியாளா், 10 பாய்ன்ட் டை பிரேக்கா் கொண்ட 3-ஆவது செட் மூலம் முடிவானது இதுவே முதல் முறையாகும்.

இவா்கள் 6-ஆவது முறையாக சந்தித்த நிலையில், கீஸ் 2-ஆவது வெற்றி பெற்றுள்ளாா். 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்வியாடெக், முதல் சுற்றிலிருந்து எந்த ஆட்டத்திலும் தனது சா்வை இழக்காத நிலையில், இந்த ஆட்டத்தில் அவரின் சா்வை கீஸ் 8 முறை பிரேக் செய்தாா்.

இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாகவும், ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 2-ஆவது முறையாகவும் கீஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா்.

இறுதிச்சுற்றில் மோதும் சபலென்கா - கீஸ் இதுவரை 5 முறை நேருக்கு நோ் சந்தித்திருக்க, சபலென்கா 4 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளாா். ஆஸ்திரேலிய ஓபனில் கடைசி இரு சீசன்களிலுமே சாம்பியனான சபலென்கா, தற்போது ‘ஹாட்ரிக்’ கோப்பை வெல்லும் முனைப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

காயத்தால் வெளியேறிய ஜோகோவிச்..! கிண்டல் செய்த ரசிகர்களை கண்டித்த ஸ்வெரெவ்!

ஆஸி. ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோவிச், ஸ்வெரெவ் மோதினார். காயத்தினால் அவதியுற்ற ஜோகோவிச் பாதியிலேயே வெளியேறினார். 50ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதியை எட்டிய நோவக் ஜோகோவிச் த... மேலும் பார்க்க

எமர்ஜென்சி படத்தால் ரகளை! பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்பி குற்றச்சாட்டு!

எமர்ஜென்சி படம் திரையிடலின்போது காலிஸ்தான் பயங்கரவாதிகள் ரகளையில் ஈடுபட்டதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வடமேற்கு லண்டன் தொகுதி உறுப்பினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மேலும், உள்துறை அமைச்சர் இந்த வி... மேலும் பார்க்க

கர்நாடக அரசின் விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு!

கர்நாடக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு தெரிவித்துள்ளார்.கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் கிச்சா சுதிப், புலி, நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களால் தம... மேலும் பார்க்க

பொறுப்புகள் கூடும் மேஷத்துக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.Dinapalan - 24.01.2025 மேஷம்:இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களைச் சந்திக்க ... மேலும் பார்க்க

யு19 மகளிருக்கான டி20 உலகக் கோப்பை: இலங்கையை வென்றது இந்தியா

கோலாலம்பூா் : பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட (யு19) மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வியாழக்கிழமை வீழ்த்தியது.முதலில் இந்தியா 20 ஓ... மேலும் பார்க்க

இந்தியாவின் ஆட்டம் நிறைவு

ஜகாா்த்தா : இந்தோனேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியா்கள் அனைவருமே, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வியாழக்கிழமை தோல்வி கண்டனா். இதையடுத்து போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.ஆடவ... மேலும் பார்க்க