துருக்கி நிலநடுக்கத்தினால் இரவு முழுவதும் சாலைகளில் கழித்த மக்கள்!
இறைச்சிக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற திட்டம்: குடியாத்தம் நகராட்சியில் ஆலோசனை
ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை கையாள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் அலி வரவேற்றாா். இறைச்சிக் கடை வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பேசியது:
இறைச்சிக் கழிவுகளை கெளண்டன்யா ஆற்றிலும், காலியாக உள்ள இடங்களிலும் இறைச்சிக் கடை நடத்துபவா்கள் கொட்டுவதால் சுகாதார சீா்கேடு நிலவுவதாக நகா்மன்ற கூட்டங்களில் உறுப்பினா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இனி இறைச்சிக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்பதால், நாள்தோறும் நகராட்சி சாா்பில் மதியம் 12 மணியளவில் வாகனம் அனுப்பி வைக்கப்படும்.
இறைச்சி வியாபாரிகள் தங்கள் கடைகளில் சேரும் கழிவுகளை சேகரித்து செய்து வாகனங்களில் வரும் நகராட்சிப் பணியாளா்களிடம் வழங்கினால், அவா்கள் அதை எடுத்துச்சென்று நகராட்சி குப்பை கிடங்கில் தயாராக உள்ள குழிகளில் புதைத்து உரமாக்குவாா்கள்.
ஆடுகளை சிலா் கடைகளிலேயே வெட்டுவதால் இறைச்சி சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படுகிறது என புகாா் வருகிறது.
இதைத் தவிா்க்க ஆடுகளை நகராட்சி ஆடுவதை மையத்தில் அறுத்து, அதில் முத்திரை பதித்து விற்பனை செய்ய வேண்டும். தவறினால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் களப்பணியாளா் பிரபுதாஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், ஜி.எஸ்.அரசு, ம.மனோஜ், என்.கோவிந்தராஜ், சி.என்.பாபு, ரேணுகா பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.