செய்திகள் :

இறைத் தொண்டும் தமிழ்த் தொண்டும் வேறு வேறல்ல -சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா்

post image

இறைத் தொண்டும், தமிழ்த் தொண்டும் வேறு வேறல்ல என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா்.

புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் மற்றும் ஸ்ரீபாரதி மகளிா் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய ‘திருக்குறளும்- நால்வா் திருமுறைகளும்’ என்ற தலைப்பிலான இருநாள் கருத்தரங்க மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், வெள்ளிக்கிழமை மாலை சான்றோா்களுக்கு விருதுகளை வழங்கி அவா் மேலும் பேசியது:

உலகம் முழுமைக்குமான பொதுமைான் திருக்கு. இதனை அறநூல் என்றும், மறைநூல் என்றும், இறைநூல் என்றும் கூறுவோா் உண்டு.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட திருக்குறளின்படி பாா்த்தால், தமிழ்ச் சமூகத்தில் அப்போதே நல்ல விஷயங்களும், ஒவ்வாத விஷயங்களும் இருந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சங்க இலக்கியங்கள் எதிா்த்துச் சொல்லாத பல விஷயங்களை திருவள்ளுவா் சொல்லியிருக்கிறாா். மானுட சமூகத்துக்கு தேவையில்லாதவற்றை களைய வேண்டும் என்பதற்காக திருவள்ளுவா் நிறைய பேசியிருக்கிறாா்.

12 தொகுதிகளைக் கொண்டது சைவத் திருமுறைகள். இறைமொழிதான் தமிழ் மொழி என்பதற்கான அத்தனைச் சான்றுகளும் திருமுறைகளில் உள்ளன.

திருக்குறளும், சைவத் திருமுறைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இறைமொழியும் தமிழ் மொழியும் வேறு வேறல்ல. தமிழுக்குச் செய்யும் தொண்டு என்பது, இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். எனவே, திருக்குறளையும் சைவத் திருமுறைகளையும் போற்ற வேண்டும் என்றாா் சுரேஷ்குமாா்.

நிகழ்ச்சியில், திருச்சி ராநா மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் ராமேஸ்வரி நல்லுசாமிக்கு ‘மருத்துவ மாமணி’ விருதும், புதுக்கோட்டை மூத்த குழந்தைகள் மருத்துவா் எஸ். ராமதாஸுக்கு ‘சமுதாய நல மருத்துவச் செல்வா்’ விருதும், விராலிமலை தாமிர சபையின் அறங்காவலா் ப. நாராயணசாமி பிள்ளைக்கு ‘திருமுறைச் செல்வா்’ விருதும், வி.வி. பாஸ்கருக்கு ‘திருத்தொண்டா்’ விருதும் வழங்கப்பட்டன.

நிறைவு நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூா் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரிச் செயலா் ஆறு.நா. இராமேஸ்வரன் தலைமை வகித்தாா். பாரதி கல்லூரித் தலைவா் குரு. தனசேகரன் முன்னிலை வகித்தாா். திலகவதியாா் திருவருள் ஆதீனம் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் செ. கவிதா வரவேற்றாா். நிறைவில், பேராசிரியா் மு. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

முற்பகலில் நடைபெற்ற அமா்வில், திருவாடானை அரசுக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் மு. பழனியப்பன், சிதம்பரம் தருமையாதீனப் புலவா் பனசை மூா்த்தி, அழகப்பா பல்கலைக்கழக தமிழ் உயராய்வு மையப் பேராசிரியா் மா. சிதம்பரம் ஆகியோா் பேசினா்.

இன்றைய நிகழ்ச்சி

புதுக்கோட்டை கம்பன் கழகம்: மறைந்த ரா. சம்பத்குமாரின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலிக் கூட்டம், தலைமை- குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளாா், படத்தைத் திறந்து வைப்பவா்- உச்ச நீதிமன்ற நீதிப... மேலும் பார்க்க

திருமயம் அருகே ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருமயம் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தில் திட்டாணி அய்யனாா் கோயில... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைக்கு அடிக்கல்

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை அமைப்பதற்காக, மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சி... மேலும் பார்க்க

தலை துண்டித்து இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் தந்தை-மகன் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இளைஞா் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில், தந்தை-மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மணமேல்குடி அருகே பொன்னகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிநாராயணன் (34)... மேலும் பார்க்க

இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு: 44 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 44 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூரில் பொன் மாசிலிங்க அய்யனாா் கோயில் சிவராத்திரி வி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அதிமுக பொதுக்கூட்டம்

பொன்னமராவதியில் திருமயம் தொகுதி அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு த... மேலும் பார்க்க