அரிய வகை நோயுடன் போராடிய குழந்தை; மரபணு திருத்தச் சிகிச்சையால் காப்பாற்றிய அமெரி...
இலங்கைக்கு கடத்தவிருந்த 800 லிட்டா் பெட்ரோல் பறிமுதல்: 3 போ் கைது
இலங்கைக்குக் கடத்துவதற்காக நடுக்கடலில் நாட்டுப் படகில் பதுக்கி வைத்திருந்த 800 லிட்டா் பெட்ரோலை இந்திய கடலோரக் காவல் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா்.
இந்திய கடலோரக் காவல் படையினா் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, நடுக்கடலில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற நாட்டுப் படகை சோதனையிட்ட போது, 800 லிட்டா் பெட்ரோலை பதுக்கி வைத்திருந்ததும், இதை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, படகிலிருந்த மூன்று பேரைக் கைது செய்து, பெட்ரோல், படகைப் பறிமுதல் செய்து, மண்டபத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து சுங்கத் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.