பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!
இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ. 75 லட்சம் பீடி பண்டல்கள் பறிமுதல்
மணப்பாடு அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. 75 லட்சம் மதிப்பிலான பீடி பண்டல்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட, மணப்பாடு வடக்கு கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காக சரக்குப் பெட்டக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 35 கிலோ எடை கொண்ட 85 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 2,975 கிலோ பீடி இலை பண்டல்களை, உதவி ஆய்வாளா் ரவிசங்கா் தலைமையிலான போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
போலீஸாரை கண்டதும் லாரியில் வந்தவா்கள் தப்பிச்சென்றனா். இதன் சா்வதேச மதிப்பு ரூ. 75 லட்சம் என்று கூறப்படுகிறது. இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.