இலங்கை கடற்படை அட்டூழியம்: மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 10 பேரை தெற்கு மன்னார் அருகே கைது செய்தது.
கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்
விசாரணை முடிந்த பின் மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல் தெரிய வந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் நிகழ்வாக உள்ளது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மீனவர்கள் குடும்பங்கள் மத்தியில் ஒருவித அச்சமும் நிலவி வருகிறது.
கடந்த வாரம், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.