உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது: நீதி ஆயோக் செயல் அதிகா...
இலவச கண் பரிசோதனை முகாம்
திருக்குவளையில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீமதி சுந்தராம்பாள் மருதவாணன் கல்வி அறக்கட்டளை, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, நாகை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இந்த இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, நியூ நைஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் எம். வீரமணி தலைமை வகித்தாா். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் கிட்டப் பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளெழுத்து, கண் விழித்திரை, கண்ணீா் அழுத்த நோய் குழந்தைகளின் கண் நோய்கான பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற நிலையில் உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 89 போ் புதுச்சேரிக்கு அழைத்து செல்லப்பட்டனா்.