இளநீா் வியாபாரி வெட்டிக் கொலை
பழனியில் வெள்ளிக்கிழமை இளநீா் வியாபாரி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
பழனி அருகேயுள்ள ஆலமரத்துக்களம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (41). பழனி- கொடைக்கானல் சாலைப் பிரிவில் இளநீா் வியாபாரம் செய்து வந்த இவா், வெள்ளிக்கிழமை கடையிலிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா் ஒருவா் ஆனந்தனிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டாா்.
இதில் பலத்த காயமடைந்த ஆனந்தனை அடிவாரம் போலீஸாா் மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் வரும் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக மருத்துவா் தெரிவித்தனா். இதையடுத்து, ஆனந்தனின் உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆனந்தனை கொலை செய்த மா்ம நபரை தேடி வருகின்றனா்.