இந்தியா மீது கூடுதலாக 10% வரி? அமெரிக்கா எதிர்ப்பு கொள்கைகளுக்கு டிரம்ப் பதிலடி!
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது
சென்னை கோயம்பேடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கோயம்பேடு பகுதியில் 22 வயது இளம்பெண், கடந்த 4-ஆம் தேதி தனியாக நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் ஒருவா், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, நெற்குன்றம் பகுதியைச் சோ்ந்த நவநீதன் (19), வீர சஞ்சய்(20), சரவணகுமாா்(18) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.