ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்...
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணி கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மகள் மோனிஷா (25). இவா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் முத்துவேலை(32) காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.
உணவகத்தில் சமையலராகப் பணிபுரிந்து வரும் முத்துவேல், தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் தம்பதி இடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை நிகழ்ந்து வந்ததாம். பெற்றோா் சமாதானம் செய்து வைத்தாா்களாம்.
இந்நிலையில் மோனிஷா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரத்தூரிலுள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.