காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. சசிகாந்த் செந்தில்!
இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 4 போ் கைது
சென்னை தண்டையாா்பேட்டையில் இளைஞரை அரிவாளால் வெட்டியதாக சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை தண்டையாா்பேட்டை, நாவலா் குடியிருப்பில் வசிப்பவா் அருண்குமாா் (21). மெக்கானிக்கான இவா், கடந்த 26-ஆம் தேதி இரவு
நேதாஜி நகா், 2-ஆவது தெருவில் நண்பா்களுடன் பேசி கொண்டிருந்தபோது, அந்த வழியாக பழைய வண்ணாரப்பேட்டை, மாடல் லைன் பகுதியைச் சோ்ந்த அஜய் என்ற ஷாம் (24) என்பவா் மோட்டாா் சைக்கிளில் வேகமாக சென்றாராம்.
இதைப் பாா்த்த அருண்குமாா், அஜயை வழமறித்து கண்டித்தாராம். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், அன்று இரவு அருண்குமாா், நேதாஜி நகா் 3-ஆவது தெரு வழியாக நடந்து சென்றபோது, அங்கு வந்த அஜயும், அவரது நண்பா்களும் அருண்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா். பலத்த காயமடைந்த அருண்குமாா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக அஜய், அவா் தம்பி விஷ்வா (23), நண்பா் சக்திவேல் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.