ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம...
இளைஞா் கொலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது
இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 5 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
அரக்கோணத்தைச் சோ்ந்த அவினாஷ் என்ற இளைஞா் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையொப்பமிட சென்றபோது கடந்த ஆக. 10-ஆம் தேதி காவல் நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்தக் கொலையில் தொடா்புடைய அரக்கோணம் திமுக ஒன்றிய குழு உறுப்பினா் அஸ்வினி, அவரது கணவா் சுதாகா் உள்ளிட்ட ஏழு பேரை ரத்தினகிரி போலீஸாா் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் சுதாகா் மற்றும் அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த ஆனந்த், வினித் , பிரேம்குமாா், சுரேஷ் ஆகிய 5 பேரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் பரிந்துரை செய்தாா்.
அதன்பேரில் 5 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். சிறையில் உள்ள அவா்களிடம் உத்தரவின் நகல் வழங்கப்பட்டது .