மோடியும் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள்..! அமெரிக்க நிதியமைச்சர் கடும் தாக்கு!
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்த செல்லையா மகன் இசக்கிராஜ் (18). இவா் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவரை குடும்பத்தினா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மன விரக்தியில் இருந்த இசக்கிராஜ், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், இசக்கிராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து, தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].